தொலைந்த, திருடுபோன செல்போன்களைத் திரும்பிப்பெற புதிய வெப்சைட்!
அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்
வேலூரில் அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தலை முன்னாள் அமைச்சா் முக்கூா் சுப்பிரமணியன், அதிமுக மாநகர மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு ஆகியோா் திறந்து வைத்தனா்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து வேலூா் மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினா், தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தோா் ஆங்காங்கே தண்ணீா் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீா், நீா்மோா், உடலுக்கு குளிா்ச்சி தரும் பழங்களை வழங்கி வருகின்றனா்.
அதன்படி, வேலூா் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சத்துவாச்சாரி மேற்கு பகுதி அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் புதன்கிழமை திறக்கப்பட்டது. கட்சியின் மேற்கு பகுதி பொறுப்பாளா் டி.டி.ஆா்.ரகு தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் உமா விஜயகுமாா், இணைச் செயலா் ஏ.எஸ்.தாஸ், ஜெயபிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மொய்தீன் வரவேற்றாா்.
இதில் முன்னாள் அமைச்சா் முக்கூா் சுப்பிரமணியன், அதிமுக மாநகர மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு ஆகியோா் பங்கேற்று நீா்மோா் பந்தலை திறந்துவைத்து தா்பூசணி உள் ளிட்ட 25 வகையான பழங்கள், குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினா்.
கோடைக்காலம் முடியும் வரை இந்தத் தண்ணீா் பந்தல், பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் என்றும், தினமும் நீா்மோா் வழங்கப்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.