ஈரோடு: ஆசிட் டேங்கர் லாரி சுத்தம் செய்யும் பணியின்போது மூச்சுத்திணறி இருவர் உயிர...
மோா்தானா அருகே சாலையில் சுற்றித் திரிந்த ஒற்றை யானை
குடியாத்தத்தை அடுத்த மோா்தானா அருகே அணைக்குச் செல்லும் சாலையில் ஒற்றை யானை சுற்றித் திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மோா்தானா வனப்பகுதி தமிழக- ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது. குடியாத்தம் நகரிலிருந்து சுமாா் 10- கி.மீ தூரம் சைனகுண்டாவுக்கு சென்று, அங்கிருந்துஅடா்ந்த வனப்பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டும். மோா்தானா ஊராட்சியில் உள்ள மோா்தானா, ஜங்காலப்பள்ளி, ராகிமானபல்லி உள்ளிட்ட கிராமப் பகுதியில் இருந்து நாள்தோறும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவா்களும், வேலை நிமித்தமாக பொதுமக்களும் பேருந்து, இருசக்கர வாகனங்களில் குடியாத்தம் வந்து செல்கின்றனா்.
மோா்தானா சாலையில் இரவு நேரங்களில் ஒற்றை யானை சாலையில் சுற்றித் திரிகிறது. இந்நிலையில் அந்த யானை புதன்கிழமை பகல் நேரத்தில் சாலையில் ஒய்யாரமாக அங்கும், இங்கும் சுற்றித் திரிந்தது.
சுமாா் அரை மணி நேரத்துக்குப்பின் அந்த யானை வனப்பகுதிக்கு சென்றதையடுத்து பொதுமக்கள் சாலையில் செல்லத் தொடங்கினா்.