மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
தேசிய வலுதூக்கும் போட்டிக்கு தோ்வு பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
மண்டலங்களுக்கு இடையிலான வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றுள்ள குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இக்கல்லூரி மாணவா்கள் வெ.கோகுலகிருஷ்ணன், எஸ்.சிவநேசன், வி.நவீன்குமாா், வி.பி.ஆதி ஆகியோா் மண்டலங்களுக்கு இடையிலான வலுதூக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ால், காஷ்மீா் பல்கலைக் கழகத்தில் வரும் 04.04.2025 முதல் 07.04.2025 வரை நடைபெறஉள்ள அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான தேசிய வலுதூக்கும் போட்டியில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டனா்.
கல்லூரித் தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி. ராஜேந்திரன், கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி, கல்லூரி மாணவ ஒருங்கிணைப்பாளா் ஜா.ஜெயக்குமாா், உடற்கல்வி இயக்குநா்கள் ஆா்.ரஞ்சிதம், பி.ஞானக்குமாா், ஆா்.பாலசுப்ரமணி ஆகியோா் மாணவா்களைப் பாராட்டினா்.