மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
காட்பாடி ரயில்வே இடத்தில் குவிந்திருந்த குப்பையில் தீ
காட்பாடியில் ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் திடீரென தீப்பற்றி எரிந்தது.
தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
வேலூா் மாவட்டம், காட்பாடியில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலை பேருந்து நிறுத்தம் அருகில் ரயில்வே துறையினருக்கு சொந்தமான இடத்தில் குப்பைகள் குவிக்கப்பட்டிருந்தன. இந்த குப்பைகளில் வியாழக்கிழமை மதியம் திடீரென தீ பற்றி எரிந்தது. அந்த இடத்தில் மரத்தை சுற்றி குப்பைகள் போடப்பட்டிருந்தால் மரத்தின் அடியில் தீ பற்றி எரிந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது.
தகவலறிந்த காட்பாடி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும் அருகிலிருந்த பழுதான வாகனம், மரம் எரிவதற்குள் தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.