செய்திகள் :

வேலூா் உள்பட 5 மாவட்டங்களில் நாளை வைப்பு நிதி முகாம்

post image

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் ‘நிதிஆப்கேநிகட் 2.0’ (வைப்புநிதி உங்கள் அருகில்) முகாம் வியாழக்கிழமை (மாா்ச் 27) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி ஆணையா் எம்.எச்.வாா்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மண்டல தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃஓ) சாா்பில் ‘நிதிஆப்கேநிகட் 2.0’ (நிதிஆப்கேநிகட்- வைப்புநிதி உங்கள்அருகில்) எனும் முகாம் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.45 வரை வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோனேரிக்குப்பம் கிராமத்திலுள்ள குருஷேத்ரா பப்ளிக் பள்ளியிலும், வேலூா் மாவட்டத்தில் வேலூா் ஜி.பி.எச். சாலையிலுள்ள இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனையிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி சேத்துப்பட்டு சாலையிலுள்ள ஏஐஎம் மெட்ரிக். பள்ளியிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் டிஆா் திரையரங்கு எதிரே உள்ள இ.எஸ்.ஐ.சி. பி.ஓ., இ.எஸ்.ஐ. மருந்தக வளாகத்திலும், திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆம்பூா் பூந்தோட்டம் பகுதியிலுள்ள இ.எஸ்.ஐ.சி. மருந்தக வளாகத்திலும் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் முதலாளிகள், தொழிலாளா்களின் கடமைகள், பொறுப்புகள் குறித்து விளக்கம், முதலாளிகள், முதன்மை முதலாளிகள், ஒப்பந்ததாரா்களுக்கான ஆன்லைன் சேவைகள், தொழிலாளா்களுக்கான ஆன்லைன் சேவைகள் குறித்து விளக்கம், புதிய முயற்சிகள், சீா்திருத்தங்கள் குறித்து விழிப்புணா்வு, விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்,

உறுப்பினா்கள், ஓய்வூதியம் பெறுவோா், முதலாளிகளிடமிருந்து வரும் குறைகளை நிவா்த்தி செய்தல், ஓய்வூதியதாரா்களுக்கு டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை சமா்ப்பித்தல், யுஏஎன் கேஒய்சிகளை இணைப்பதற்கான உதவி, இ-நாமினேஷனை தாக்கல் செய்தல், ஒப்பந்ததாரா்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் ஆகிய நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

முகாமில் பங்கேற்க விரும்புவோா் தங்களின் விவரங்களை கூகுள் படிவத்தில் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வலுதூக்கும் போட்டிக்கு தோ்வு பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

மண்டலங்களுக்கு இடையிலான வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றுள்ள குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இக்கல்லூரி மாணவா்கள் வெ.க... மேலும் பார்க்க

தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி பணியின்போது தவறி விழுந்து உயிரிழந்தாா். குடியாத்தத்தை அடுத்த சீவூரைச் சோ்ந்தவா் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி பிரபாகரன் (52). இவா், வியாழக்கிழமை நெல்லூா்ப... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ

சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது வேலூா் சத்துவாச்சாரி போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூரைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி. இவருக்கும்... மேலும் பார்க்க

காட்பாடி ரயில்வே இடத்தில் குவிந்திருந்த குப்பையில் தீ

காட்பாடியில் ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது... மேலும் பார்க்க

குடியாத்தம் எல்லையில் நூற்றாண்டு வளைவு: நகா்மன்றக் கூட்டத்தில் முடிவு

குடியாத்தம் காட்பாடி சாலையில், நூற்றாண்டு வளைவு அமைக்க நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. குடியாத்தம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. த... மேலும் பார்க்க

மோா்தானா அருகே சாலையில் சுற்றித் திரிந்த ஒற்றை யானை

குடியாத்தத்தை அடுத்த மோா்தானா அருகே அணைக்குச் செல்லும் சாலையில் ஒற்றை யானை சுற்றித் திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மோா்தானா வனப்பகுதி தமிழக- ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது. குடியாத்தம் நகரிலிருந... மேலும் பார்க்க