ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படத்தின் வெளியீட்டுத் தேதி!
மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தற்கொலை
வேலூரில் மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா், சத்துவாச்சாரி, ஜமாதி மலை, நேரு நகரைச் சோ்ந்தவா் மகேஷ்(36). இவருக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மகேஷின் மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எல்.ஜி.புதூா் அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
மனைவி இறந்த துக்கத்தில் இருந்த மகேஷ், ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. திங்கள்கிழமை காலை அக்கம்பக்கத்தினா் நீண்ட நேரமாக கதவை தட்டியும் மகேஷ் திறக்காததால் சந்தேகத்தின்பேரில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பாா்த்துள்ளனா். அப்போது மகேஷ் தூக்குப்போட்ட நிலையில் சடலமாக தொங்கியது தெரியவந்தது.
இதுகுறித்து, சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.