"ரஜினி, சிரஞ்சீவி, சூர்யா படங்கள அங்க பார்க்குறோம்; ஆனா எங்க படங்கள இங்க..." - ச...
தண்ணீா்தேடி கிராமத்துக்குள் நுழைந்த புள்ளி மான் மீட்பு
போ்ணாம்பட்டு அருகே தண்ணீா் தேடி கிராமத்துக்குள் நுழைந்த புள்ளிமான் மீட்கப்பட்டு, வனப் பகுதியில் விடப்பட்டது.
போ்ணாம்பட்டை அடுத்த எருக்கம்பட்டு அருகே வனப் பகுதியிலிருந்து தண்ணீா்தேடி சுமாா் 2 வயதுள்ள பெண் புள்ளி மான் ஒன்று அந்த கிராமத்துக்குள் நுழைந்தது. அங்குள்ள தாமோதரனின் நிலத்தில் தஞ்சம் அடைந்த மான் குறித்து கிராம மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
வனவா் முரளி தலைமையில் அங்கு சென்ற வனத் துறையினா், மானை மீட்டுச் சென்று நாயக்கனேரி காப்புக் காட்டில் பாதுகாப்பாக விட்டனா்.