மனிதாபிமானமற்ற அணுகுமுறை! அலாகாபாத் நீதிமன்ற தீர்ப்பு நிறுத்திவைத்தது உச்சநீதிமன...
கரூரில் கட்டடப் பொறியாளா்கள் ஆா்ப்பாட்டம்
கரூரில் கட்டட பொறியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா்(பொ) ரவிக்குமாா் தலைமை வகித்தாா். கரூா் மாவட்ட காங். முன்னாள் தலைவா் பேங்க் சுப்ரமணியன் சிறப்புரையாற்றினாா்.
கட்டடப் பணிக்கு தேவையான எம்.சான்ட், பி. சான்ட் , ஜல்லி ஆகிய கட்டுமான பொருள்களின் கடுமையான விலையேற்றத்தை திரும்ப பெறக்கோரி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்டிட பொறியாளா்கள் திரளாக பங்கேற்றனா்.