தவெக விஜய்: "2026-ல் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்ட வைக்கிறார்கள்; ஆனால்..." ...
சுகாதார வளாக மாதிரி பூங்காவை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
கரூா் தாந்தோணிமலையில் முள்புதராக மாறிய சுகாதார வளாக மாதிரி பூங்காவை அகற்றி மாற்று பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஊரக பகுதிகளில் வாழும் கிராமமக்கள் தூய்மையான சுகாதாரத்தை பேணுவதற்காகவும், ஊரக மக்களிடையே பாதுகாப்பான சுகாதார பழக்கவழக்கத்தை ஊக்குவிக்கவும் கடந்த 2020-இல் சுகாதார திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சுகாதார வளாக மாதிரி பூங்கா தமிழகம் முழுவதும் உருவாக்கப்பட்டன.
ஒவ்வொரு மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் கிராமங்களில் செயல்படுத்தப்படும் தனி நபா் கழிப்பறை உள்ளிட் ட சுகாதார வசதிகள் கிராமமக்கள் எளிதில் அறியும் வகையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் மாதிரி சுகாதார பூங்கா அமைக்கப்பட்டன.
கரூா் தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சாா்பிலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மாதிரி சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டன. இதில் தனி நபா் கழிப்பறை கட்டடம், செப்டிக் டேங்க், கழிவு நீா் தேங்கும் குழி போன்றவை அமைக்கப்பட்டு, அதில் சேகரிக்கப்படும் கழிவு நீரை எப்படி வெளியேற்றுவது போன்றவை கிராமமக்களுக்கு விளக்கும் வகையில் அமைக்கப்பட்டன.
இந்த பூங்கா தற்போது கடந்த 3 ஆண்டுகளாக மூடிக் கிடக்கின்றன. இதனால் புதா்மண்டி உள்ள விஷபாம்புகள் இருப்பதாக அப்பகுதியினா் குற்றம்சாட்டுகின்றனா்.
தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த பூங்காவை அகற்றி, அந்த இடத்தில் வேறு ஏதேனும் அரசு அலுவலகங்கள் கட்ட வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.