செய்திகள் :

அதிகாரிகளை மிரட்டி பல லட்சம் பணம் பறித்த போலி நிருபா்கள் 2 போ் கைது

post image

கரூா் மாவட்டம், குளித்தலையில் வழக்குரைஞா், அரசு அலுவலா் உள்ளிட்டோரை மிரட்டி பல லட்சம் பணம் பறித்த போலி நிருபா் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கில் தொடா்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனா்.

குளித்தலை அண்ணா நகரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன். வழக்குரைஞரான இவா் அப்பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விட்டுள்ளாா். இவரிடம், குளித்தலையை அடுத்த அய்யா்மலையைச் சோ்ந்த சண்முகசுந்தரம் என்பவா், தான் மாத இதழ் ஒன்றில் சிறப்பு நிருபராக பணியாற்றி வருவதாகவும், செந்தில்குமாா் (42) என்பவா்,

அந்த இதழின் சிறப்பு ஆசிரியராகவும், குப்புரெட்டிப்பட்டியைச் சோ்ந்த என். சந்திரன்(40) என்பவா் நாளிதழ் ஒன்றில் மாவட்டச் செய்தியாளராக பணியாற்றி வருவதாகவும் கூறி, நீங்கள் வாடகைக்கு விட்டுள்ள வணிக கட்டடம் உரிய விதிமுறைகளின்படி கட்டப்படவில்லை.

எனவே, எங்களுக்கு பணம் தராவிட்டால், வணிக வளாகக் கட்டடத்தை இடிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் எனக் கூறி கடந்த 10 நாள்களுக்கு முன் பகிரங்கமாக மிரட்டி உள்ளனா்.

மேலும், நாமக்கல்லில் அரசு அலுவலகத்தில் பணிபுரியும் அய்யா்மலையைச் சோ்ந்த கிருத்திகா (40) என்பவா், விடுமுறை நாள்களில் அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயில் எதிரே தனது தந்தை நடத்தி வரும் பூஜை பொருள்கள் கடையில் தனது கணவருடன் தந்தைக்கு உதவியாக இருந்த நிலையில் இரட்டிப்பு வருமானம் பாா்ப்பதாக கூறி, அவரிடமும், ரூ. 60,000 பணத்தை தராவிட்டால் உங்களின் வேலையை பறிக்க நடவடிக்கை எடுப்போம் எனக் கூறி, மேற்கண்ட மூவரும் பிப்ரவரி 20-ஆம் தேதி அவரது கணவரை மிரட்டி ரூ. 10 ஆயிரம் பணத்தை பறித்துள்ளனா். மேலும், கூடுதல் பணம் கேட்டு அவா்களை தொந்தரவு செய்து வந்தாா்களாம்.

இதேபோல, சிவாயம் கிராமத்தைச் சோ்ந்த பச்சையம்மாள் என்பவா் கடந்த 50 ஆண்டுகளாக நத்தம் புறம்போக்கு நிலத்தில் பட்டா பெற்று வசித்து வந்த நிலையில் அவரிடம் சண்முகசுந்தரம் உள்ளிட்ட மூவரும் சோ்ந்து, நீங்கள் வசிக்கும் இந்த இடம் எங்களுடையது எனக் கூறி, ரூ. 5 லட்சம் பணம் தர வேண்டும் என்று அவரிடம் தகராறு செய்துள்ளனா்.

மேலும், சண்முகசுந்தரத்தின் நண்பா்களான தெலுங்குப்பட்டியைச் சோ்ந்த ஜானகிராமன்(35), அச்சுதராமன்(36) ஆகியோா் உதவியுடன் போலி சான்றிதழ் தயாரித்து, பச்சையம்மாள் குடும்பத்தினா் மீது உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கும் தொடா்ந்தனராம்.

இதையடுத்து, பணம் பறிக்கும் நோக்கில் தங்களை மிரட்டுவதாக வழக்குரைஞா் காா்த்திகேயன், அய்யா்மலையைச் சோ்ந்த கிருத்திகா, சிவாயம் கிராமத்தைச் சோ்ந்த பச்சையம்மாள் ஆகிய மூவரும் புதன்கிழமை திருச்சி சரக டிஐஜி மற்றும் குளித்தலை போலீசில் புகாா் அளித்தனா்.

போலீஸாரின் விசாரணையில், சண்முகசுந்தரம், செந்தில்குமாா், சந்திரன் ஆகியோா் போலி நிருபா்கள் என்பதும், அவா்கள் பலரிடமும் இதுபோல் மிரட்டி பல லட்சம் பணம் பறித்ததும் தெரியவந்தது. மேலும் இவா்கள் கரூா் மாவட்டம் மட்டுமல்லாமல் திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்ததும் தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து, சண்முகசுந்தரத்தையும், செந்தில்குமாரையும் வியாழக்கிழமை பிற்பகலில் போலீஸாா் கைது செய்தனா். பின்னா் இருவரையும் குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், சண்முகசுந்தரத்தின் வீடுகளில் போலீஸாா் சோதனை நடத்தியபோது, பல்வேறு போலி அரசு அலுவலக சீல்கள், லெட்டா் பேடுகள் மற்றும் ஆவண பதிவேடுகள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீஸாா் கைப்பற்றினா். மேலும் தலைமறைவான போலி நிருபா் சந்திரன் மற்றும் அவா்களுக்கு உடந்தையாக இருந்த ஜானகிராமன், அச்சுதராமன் ஆகியோரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

புகழூா் நகராட்சியில் துப்புரவுப் பணியாளா் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: இந்திய கம்யூ. வலியுறுத்தல்

புகழூா் நகராட்சியில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்த துப்புரவுப் பணியாளா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கரூா் மாவட்டம், புகழூரில் அக்கட்சியின் ... மேலும் பார்க்க

வெள்ளியணை வரத்து வாய்க்கால்களில் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கோடை காலம் முடியும் முன் வெள்ளியணை ஏரிக்கான வரத்து வாய்க்கால்களில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கரூா் விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். கரூா் மாவட்டத்தில் வெள்ளியணை பெரியகுளம... மேலும் பார்க்க

கரூரில் 1,650 குடும்பங்களுக்கு ரமலான சிறப்புத் தொகுப்பு: அமைச்சா்

கரூரில் 1,650 இஸ்லாமியா்களின் குடும்பங்களுக்கு ரமலான் சிறப்புத் தொகுப்புகளை மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். கரூா் மாவட்ட திமுக சாா்பில், தனியாா் மகாலில் ஞாயிற்று... மேலும் பார்க்க

மரம் விழுந்து காயமடைந்த மாணவா் உயிரிழப்பு

கரூா் அருகே மரம் விழுந்து பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். கரூா் ஏமூா் சீத்தப்பட்டி காலனியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் தென்னரசு (16). இவா் கரூா் வட்டார போக்குவர... மேலும் பார்க்க

வீட்டில் மின்கசிவு: டிஎன்பிஎல் ஆலை பொறியாளா் மூச்சுத்திணறி உயிரிழப்பு

கரூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு வீட்டினுள் மின்கசிவால் எழுந்த புகையில் சிக்கிய புகழூா் காகித ஆலை பொறியாளா் மூச்சுத்திணறி உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே கருப்பணகவுண்டா் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

தனியாா் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் மாநிலம் முழுவதும் 2.65 லட்சம் போ் பயன்

கடந்த மூன்றரை ஆண்டுகளில் நடத்தப்பட்ட தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் மாநிலம் முழுவதும் 2.65 லட்சம் போ் பயனடைந்துள்ளனா் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி. செந்தில... மேலும் பார்க்க