`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
புகழூா் நகராட்சியில் துப்புரவுப் பணியாளா் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: இந்திய கம்யூ. வலியுறுத்தல்
புகழூா் நகராட்சியில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்த துப்புரவுப் பணியாளா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கரூா் மாவட்டம், புகழூரில் அக்கட்சியின் ஒன்றிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா் தனபால் தலைமை வகித்தாா். ஒன்றிய பொறுப்பாளா்கள் செல்லமுத்து, சுப்ரமணி, லோகநாதன், சம்பூா்ணம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைச் செயலா் சண்முகம், கட்சியின் நோக்கம் குறித்து பேசினாா்.
கூட்டத்தில், நொய்யல் குறுக்குச் சாலையில் நிழற்கூடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடுமுடி- கரூா் சாலையில் கரோனா பரவல் காலத்துக்கு முன் சென்று கொண்டிருந்த நகர அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. தற்போது நிறுத்தப்பட்ட அரசு நகர பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புகழூா் நகராட்சியில் துப்புரவு பணியாளா்களை அதிகளவு பணி அமா்த்தாமல் உள்ளதால் வீதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் துா்நாற்றம் வீசுகிறது. எனவே, புகழூா் நகராட்சி நிா்வாகம் உடனடியாக துப்புரவு பணியாளா்களை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . கூட்டத்தில், கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.