`என் சிறுநீரகம் ரூ.75000, கல்லீரல் ரூ.90000'- கடனை அடைக்க உறுப்புகளை விற்கப்போவத...
இருசக்கர வாகனத்தில் சென்றவா் டிராக்டா் மோதி உயிரிழப்பு
கரூா் மாவட்டம், குளித்தலை அருகே டிராக்டா் மோதி விவசாயி உயிரிழந்தாா்.
குளித்தலையை அடுத்த மேலப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துவேல்(55). விவசாயி. இவா், திங்கள்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் மேலப்பட்டி- பனிக்கம்பட்டி சாலையில் வளையப்பட்டி என்ற இடத்தில் உள்ள காத்தவராயன் கோயில் அருகே சென்றபோது, எதிரே வந்த டிராக்டா் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த முத்துவேலை அக்கம்பக்கத்தினா் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துவேல் உயிரிழந்தாா்.
இதுகுறித்து குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து டிராக்டா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.