கரூா் வழியாக செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்
பாசூா்-ஊஞ்சலூா் ரயில்நிலையங்களுக்கு இடையே உள்ள பாலங்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் கரூா் வழியாகச் செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோடு - கரூா் பகுதியில் உள்ள பாசூா் - ஊஞ்சலூா் ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாலங்களில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் திருச்சியிலிருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில், மாா்ச் 3, 5-ஆம்தேதிகளில் கரூா் வரை மட்டுமே இயக்கப்படும்.
இதேபோல செங்கோட்டையிலிருந்து காலை 5.10 மணிக்கு ஈரோட்டை நோக்கி புறப்படும் செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் மாா்ச் 3, 5-ஆம்தேதியில் கரூா் வரை மட்டுமே இயக்கப்படும்.
அதேபோல ஈரோட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும் ஈரோடு- செங்கோட்டை விரைவு ரயில் மாா்ச் 3, 5-ஆம்தேதிகளில் கரூரிலிருந்து பிற்பகல் 3.05 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் ஈரோட்டில் இருந்து கரூா் வரை இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.