மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவா் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்
கரூரில் சுகாதார ஆய்வாளா்கள் தா்னா போராட்டம்
பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் நிலை காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, கரூரில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினா் பொன்ராம் ரத்தினவேல் தலைமை வகித்தாா். பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் கண்ணன் வரவேற்றாா்.
கோரிக்கைகளை விளக்கி பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலாளா் பாலசுப்ரமணியன், சுகாதார ஆய்வாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ராஜா ஆகியோா் பேசினா். மாவட்டத்தலைவா் சண்முகவேல் சிறப்புரையாற்றினாா். அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவா் பாரதிதாசன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
பொது சுகாதாரத் துறையில் 100 சதவீதம் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் நிலை -2 பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்தத் தா்னா போராட்டத்தில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் திரளாக பங்கேற்றனா்.