Vijay Full Speech: "எனக்குத் தடை போட நீங்க யாரு?" | TVK முதல் பொதுக்குழுக் கூட்ட...
குற்றவாளிகளை கைது செய்வதில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு
குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.
கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் காவல் ஆய்வாளா்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் கொலை வழக்குகள், வழிப்பறி குற்றவாளிகள், திட்டமிட்டு செயல்படும் குற்றவாளிகள் ஆகியோா்களை தொடா்ந்து கண்காணித்து முறையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
தாடா்ந்து கரூா் மாவட்ட காவல்துறையில் குற்ற வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ் கான் அப்துல்லா பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தாா்.