தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை!
சின்னதாராபுரத்தில் சாலை மேம்பாட்டுப் பணி தீவிரம்
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்துள்ள சின்னதாராபுரத்தில் சாலை மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சின்னதாராபுரம் பகுதியில் கடந்த 10 நாள்களாக சாலையை அகலப்படுத்தும் மற்றும் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கரூா் கோட்டம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலை உள்கோட்டத்திற்கு உள்பட்ட கரூரிலிருந்து தாராபுரம் வழியாக பொள்ளாச்சி செல்லும் 93 கிலோ மீட்டா் தொலைவு உள்ள சாலை மற்றும் சின்னத்தாராபுரம் அருகே உள்ள எம்ஜிஆா் நகரில் உள்ள சாலை சந்திப்பை 2024- 25 -ஆம் ஆண்டு நிதி திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணி நடைபெற்ற வருகிறது.
இதனை அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் அழகா்சாமி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். இதில் நெடுஞ்சாலை துறை ஊழியா்கள் மற்றும் அலுவலா்கள் உள்பட பலா் உடன் இருந்தனா்.