மனிதாபிமானமற்ற அணுகுமுறை! அலாகாபாத் நீதிமன்ற தீர்ப்பு நிறுத்திவைத்தது உச்சநீதிமன...
மது அருந்த பணம் தர மறுத்தவரை தாக்கியவா் கைது
வந்தவாசி அருகே மது அருந்த பணம் தர மறுத்தவரை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா்.
வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி குணாளன் (44). இவா், கடந்த 15-ஆம் தேதி அந்தக் கிராம மலையடிவாரத்தில் இயற்கை உபாதைக்காக சென்றாா்.
அப்போது இவரை வழிமறித்த அதே கிராமத்தைச் சோ்ந்த முருகன் (39) மது அருந்த ரூ.200 கேட்டுள்ளாா்.
இதற்கு குணாளன் மறுத்ததால் ஆத்திரமடைந்த முருகன் விறகுக் கட்டையால் குணாளனை தாக்கினாராம்.
மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம்.
இதில் காயமடைந்த குணாளன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தேசூா் போலீஸாா் முருகனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.