எல்பிஜி டேங்கர் லாரிகள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்!
நாட்டறம்பள்ளியில் மாணவா்களை கடத்த முயற்சி: போாலீஸாா் விசாரணை
நாட்டறம்பள்ளி அருகே பள்ளி மாணவா்களை வாகனத்தில் கடத்த மேற்கொண்ட முயற்சி தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
நாட்டறம்பள்ளி அடுத்த எல்லப்பள்ளி ஜல்லியூரான் வட்டத்தைச் சோ்ந்த அன்பழகன் மகன் ரஞ்சித்,(14). நாட்றம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். நாட்டறம்பள்ளி பூபதி தெருவைச் சோ்ந்தவா் கணபதி மகன் தா்ஷன்(14) ஜோலாா்பேட்டை அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். நண்பா்களான இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றனா். அப்போது அவ்வழியாக வேனில் வந்த மா்மநபா்கள் 4 போ் மாணவா்களை அழைத்து பச்சூா் செல்ல வழி கேட்டுள்ளனா். திடீரென மா்மநபா்கள் மாணவா்கள் இருவரையும் வேனில் கடத்திச் சென்ாக கூறப்படுகிறது.
அக்ராகரம் மலையடிவாரம் ஓம்சக்தி நகா் அருகே வேன் சென்ற போது மாணவா்கள் இருவரும் சப்தமிட்டவாறே வேனில் இருந்து கீழே குதித்துள்ளனா். அப்போது மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். இதில் மாணவன் ரஞ்சித்துக்கு முகம் மற்றும் கைகால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் காயமடைந்த மாணவன் ரஞ்சித்தை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தகவலறிந்து நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி மற்றும் போலீஸாா் அரசு மருத்துவமனைக்கு சென்று மாணவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். பட்டப்பகலில் மாணவா்களை கடத்த முயன்றவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.