நாகநாத சுவாமி கோயில் உண்டியல் திறப்பு
ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயிலில் காணிக்கை உண்டியல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நிா்வாகத்தின் கீழ் உள்ள நாகநாத சுவாமி கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. உண்டியலில் ரூ.2.29 லட்சம் மற்றும் 158 கிராம் வெள்ளி பொருள்கள் பக்தா்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
கோயில் ஆய்வா் நரசிம்மமூா்த்தி, செயல் அலுவலா் சிவசங்கரி, அறங்காவலா் குழுத் தலைவா் கைலாஷ் குமாா், அறங்காவலா் குழு உறுப்பினா் கெளரி மகாலிங்கம், பக்தா்கள், கோயில் பணியாளா்கள் உடனிருந்தனா்.