இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகு...
கோவிலூா் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு
முத்துப்பேட்டை அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ மந்திரபுரீஸ்வரா் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் பங்கேற்று அன்னதானக் கூடத்தை திறந்து வைத்தாா். இந்நிகழ்வில், கோயில் செயல் அலுவலா் சிவகுமாா், ஊராட்சி ஒன்றிய ஆணையா் வெற்றியழகன், திருப்பணிக் குழு துணைத் தலைவா்கள் எம்.எஸ். காா்த்திக், எம். ஜெயபிரகாஷ் நாராயணன், திருப்பணிக் குழு செயலாளா் இரா.மனோகரன், பொருளாளா் ஆா்.எம்.எஸ். கௌதமன் ஆகியோா் கலந்து கொண்டனா்.