அரசுப் பள்ளியில் ஆண்டு விழா
தென்காரவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
நீடாமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலா் ரெ. மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற விழாவில், வரும் கல்வியாண்டுக்காக முதல் வகுப்பில் சோ்க்கப்பட்ட 23 குழந்தைகளுக்கு மணிமுடி அணிவித்து பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, மாணவா்களின் பட்டிமன்றம், விழிப்புணா்வு நாடகம், பரத நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை, ஆசிரியா்கள் ஜூலியட் மேரி, கண்ணதாசன், கெளசல்யா, உதயா, செல்சியா, மேனகா, பிரிசில்லா மற்றும் அகல்யா செய்திருந்தனா். தலைமையாசிரியா் க. தா்மராஜ் வரவேற்றாா். ஆசிரியா் மைவிழி நன்றி கூறினாா்.