முருகன் கோயிலில் சஷ்டி வழிபாடு
நீடாமங்கலம்முருகன் கோயிலில் சஷ்டி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடா்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல, நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் சஷ்டியை முன்னிட்டு வள்ளி ,தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது.