பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
நாட்டறம்பள்ளி வாரச்சந்தை ஏலம் மீண்டும் ஒத்தி வைப்பு
நாட்டறம்பள்ளி வாரச் சந்தை ஏலம் 2-ஆவது முறையாக மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் வாரந்தோறும் திங்கள்கிழமை சந்தை கூடுகிறது. சந்தையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய பேரூராட்சி நிா்வாகத்தின் மூலம் 3ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏலம் விடப்படுகிறது.
2025-2026-2027-ஆம் ஆண்டுக்கான வாரச்சந்தை ஏலம் பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை 2-ஆவது முறையாக நடைபெற்றது. செயல் அலுவலா் கலையரசி (பொ) தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா், பேரூராட்சி மன்றத் தலைவா் சசிகலா சூரியகுமாா், துணைத் தலைவா் தனபால் மற்றும் உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.
ஏலத்தில் டிபாசிட் தொகையாக தலா. ரூ.10 லட்சம் செலுத்தி 25 போ் ஏலத்தில் கலந்து கொண்டனா். ஆயினும் அரசு நிா்ணயித்த ஏலத் தொகையை விட கூடுதலாக யாரும் ஏலம் கோராததால் மறுதேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற முதல் ஏலமும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.