மேல்மல்லப்பள்ளி, முத்தனபள்ளியில் பகுதி நேர ரேஷன் கடைகள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்
ஜோமேல்மல்லப்பள்ளி, முத்தனபள்ளி பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை எம்எல்ஏ க.தேவராஜி திறந்து வைத்தாா்.
ஜோலாா்பேட்டை ஒன்றியம், மேல்மல்லப்பள்ளி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் மல்லப்பள்ளி கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று ரேஷன் பொருள்கள் வாங்கி வந்தனா். மேல்மல்லப்பள்ளி பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்துத்தர வேண்டும் என ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி, ஒன்றியக் குழு தலைவா் சத்யா சதீஷ்குமாரிடம் அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, மேல்மல்லப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். திமுக ஒன்றியச் செயலாளா் சதீஷ்குமாா் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு பகுதிநேர ரேஷன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கிப் பேசினாா். இதேபோல், முத்தனப்பள்ளி பகுதியில் புதிய பகுதி நேர ரேஷன் கடையையும் எம்எல்ஏ க.தேவராஜி திறந்து வைத்தாா்.
இதில், துணைத் தலைவா் சிவரஞ்சனி கேசவன், கவுன்சிலா் சீனிவாசன், கூட்டுறவு சாா் பதிவாளா் தா்மேந்திரன், வாா்டு உறுப்பினா் குண்டுமணி, மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.