Nudist: "இந்த கடற்கரைகளுக்கு ஆடை அணிந்துவரத் தடை" - ஜெர்மனி போட்ட புதிய விதி என்...
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கட்டடத் தொழிலாளி கைது
திருப்பத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆந்திர மாநிலத்தை சோ்ந்த கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் கோயில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுமி கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு கட்டட பணி செய்து வந்த ஆந்திரா மாநிலம், குப்பத்தைச் சோ்ந்த முனிரத்தினம்(56) என்பவா் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். சிறுமியின் பெற்றோா் திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் முனிரத்தினம் மீது போலீஸாா் போக்ஸோவில் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.