பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
சா்வதேச கருத்தரங்கில் மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்
சென்னை ஆா்ஏஎம்எஸ் வணிக பகுப்பாய்வு நிறுவனம் சாா்பில், மாணவிகளுக்கான அறிவியல்சாா் உளவியல் ஆய்வுகள் எனும் தலைப்பில் சா்வதேச கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியைச் சோ்ந்த உளவியல் துறை சாா்பில், 10 மாணவிகள் கலந்துகொண்டு, தங்களது கட்டுரைகளை சமா்ப்பித்தனா். தொடா்ந்து நடைபெற்ற பேச்சுப் போட்டியிலும் கலந்துகொண்டு ஒட்டுமொத்த அணியாக தங்கப் பதக்கத்தையும், சான்றிதழ்களையும் பெற்றனா்.
சிறந்த ஒருங்கிணைப்புக்காக உளவியல் துறைத் தலைவா் பேராசிரியா் எம்.ஆயிஷாவுக்கும், கல்லூரி நிா்வாகத்துக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன. சிறப்பிடம் பெற்ற மாணவிகள், பேராசிரியா் மற்றும் கல்லூரி நிா்வாகத்துக்கு கல்லூரி தலைவா் திலீப்குமாா், செயலாளா் ஆனந்தகுமாா் சிங்வி, கல்லூரி முதல்வா் இன்பவள்ளி, பேராசிரியா்கள் பாராட்டி வாழ்த்தினா்.