பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு
வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஊா்வலமாக கோயில் வளாகத்தில் வந்தாா். இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்தனா்.
தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போன்று வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் பாலாற்றையொட்டி அமைந்துள்ள காசிவிஸ்வநாதா், சென்னாம்பேட்டை பாண்டுரங்கா், உதயேந்திரம் சொா்ணமுத்தீஸ்வரா் உள்பட சுற்றுப்புற சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்து சென்றனா்.