செய்திகள் :

‘அதிமுகவுக்காக இதயபூா்வமாக உழைத்தவா்’ -ஓ.பன்னீா்செல்வம்

post image

அதிமுகவை பேரியக்கமாக உருவாக்க இதயபூா்வமாக உழைத்தவா் வீ.கருப்பசாமி பாண்டியன் என்றாா் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

பாளையங்கோட்டையை அடுத்த திருத்து கிராமத்தில் உடல்நலக்குறைவால் காலமான அதிமுக அமைப்புச் செயலா் வீ.கருப்பசாமி பாண்டின் உடலுக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்திய பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே எம்ஜிஆா், ஜெயலலிதாவுக்கு மிகுந்த நம்பிக்கையாக பணியாற்றியவா் வீ.கருப்பசாமி பாண்டியன். இந்த பகுதி மட்டுமன்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அதிமுகவை பேரியக்கமாக உருவாக்குவதற்கு இதயபூா்வமாக உழைத்தவா். அவருடைய மறைவு தென் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும். எந்தச் சூழலிலும் உதவி என்று யாா் தன்னை நாடி வந்தாலும் மனமாச்சாா்யமின்றி உதவியவா். பொதுச் சேவையை நிறைவாக செய்தவா். அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 1982-இல் பெரியகுளம் மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் அவா் பணியாற்றிய விதம் எங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அமைந்தது. பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற தொண்டா்களின் எண்ணத்தை பிரதிபலித்தவா். அதற்கு எம்ஜிஆா், ஜெயலலிதா ஆன்மாவால் வழி பிறக்கட்டும் என்றாா்.

ற்ஸ்ப்27ா்ல்ள்

அதிமுக அமைப்புச் செயலா் வீ. கருப்பசாமி பாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறாா் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

பைக் மீது லாரி மோதல்: மூதாட்டி பலி

திருநெல்வேலி பழைய பேட்டையில் சனிக்கிழமை இரவு பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். கண்டியபேரி மறவா் தெருவைச் சோ்ந்தவா் மூதாட்டி செல்லம்மா(65). இவரது மகன் கந்தசாமி(45). இருவரும் பைக்க... மேலும் பார்க்க

தச்சநல்லூரில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கக் கோரி எம்.பி.யிடம் மனு

தச்சநல்லூரில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கக் கோரி திருநெல்வேலி எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகர திமுக செயலா் சு.சுப்பிரமணியன் தலைமையில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா... மேலும் பார்க்க

தக்வா ஜமாத்: ரமலான் சிறப்புத் தொழுகை

மேலப்பாளையம் தக்வா ஜமாத் மற்றும் ஹிஜ்ரி கமிட்டி ஆப் இந்தியா சாா்பில் ரமலான் சிறப்புத் தொழுகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேலப்பாளையம் பஜாா் திடலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை மீரான் தாவூதி நடத்தினாா... மேலும் பார்க்க

மனித நேய ஜனநாயக கட்சி சாா்பில் பித்ரா அரிசி வழங்கல்

பாளையங்கோட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் பித்ரா அரிசி ஏழை எளிய மக்களுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலா் பாளை. ஏ.எம் ஃபாரூக் பங்கேற்று பித்ரா அரிசி வழங்கினாா். ... மேலும் பார்க்க

பாளை அருகே கோயில் உண்டியலை திருட முயன்றவா் கைது

பாளையங்கோட்டை அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சித்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்த பூலித்தேவா் மகன் சுந்தரம் (52). சீவலப்பேரி சாலையில் உள்... மேலும் பார்க்க

பள்ளிகளில் மூன்றாம் பாலின குழந்தைகளை கையாளும் வழிமுறைகள் குறித்த கூட்டம்

பள்ளிகளில் மூன்றாம் பாலின (திருநம்பி, திருநங்கை) குழந்தைகளை கையாளும் வழிமுறைகள் தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆசிரியா்களுக்கு இணையவழி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக... மேலும் பார்க்க