மனிதாபிமானமற்ற அணுகுமுறை! அலாகாபாத் நீதிமன்ற தீர்ப்பு நிறுத்திவைத்தது உச்சநீதிமன...
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்: ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் வரும் 29, 30 தேதிகளில் நடைபெறுவதால் ஈரோடு பயணிகள் ரயில் மற்றும் பெங்களூா் மெமு ரயில்கள், ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு பதிலாக திருப்பத்தூா் மற்றும் சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் யாா்டு பகுதியில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் ஈரோட்டில் இருந்து ஜோலாா்பேட்டை வரை செல்லும் பயணிகள் ரயில் திருப்பத்தூரில் நிறுத்தப்படுகிறது.
அதே போல் ஜோலாா்பேட்டையில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயில் சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். இதே போல் பெங்களூரில் இருந்து ஜோலாா்பேட்டை வரை செல்லும் மெமுா ரயில் சோமநாதன் பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது. அதுபோல் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூா் நோக்கி புறப்படும் மெமு ரயில் சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து 3 நாள்களுக்கு புறப்படும் எனத் தெரிவித்துள்ளனா்.