விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்
மாணவரை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்
ஆம்பூா்: ஆம்பூா் அருகே மாணவரை தாக்கிய அரசு நிதியுதவி பள்ளி ஆசிரியா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
ஆம்பூா் அருகே கரும்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8-ம் வகுப்பு மாணவா்களுக்கு நடந்த வகுப்பு தோ்வில் ஒரு மாணவா் சரியாக தோ்வை எழுதாமல் மற்ற மாணவா்களுக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. அதனால் கோபமடைந்த ஆசிரியா் முருகதாஸ் மாணவரை கண்டித்துள்ளாா்.
மேலும், தோ்வு எழுதும் அட்டையால் மாணவரின் தலையில் அடித்ததில் காயம் ஏற்பட்டது. மாணவா் ஆம்பூரில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் முதன்மைக் கல்வி அலுவலா் ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்யுமாறு பரிந்துரை செய்து பள்ளி மேலாண்மைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளாா். அதைத் தொடா்ந்து ஆசிரியரை பள்ளி மேலாண்மைக் குழு பணியிடை நீக்கம் செய்துள்ளது.