விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்
வாணியம்பாடி: பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் இடைநீக்கம்!
வாணியம்பாடி அருகே பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்தின் ஓட்டுநர் இடைநீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8.30 மணியளவில் புறப்பட்ட அரசுப் பேருந்து, கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தம் வழியாக ஆலங்காயம் நோக்கிச் சென்றுள்ளது.
கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே பிளஸ் 2 மாணவி உள்பட பல பெண்கள் நின்றிருந்த நிலையில், அந்த நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார் ஓட்டுநர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பிளஸ் 2 மாணவி பேருந்தில் ஏறுவதற்காக நீண்ட தொலைவுக்கு வேகமாக ஓடியுள்ளார். பிறகு பேருந்தை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து மாணவி ஏறினார்.
பிளஸ் 2 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் சூழலில், மாணவியை ஏற்றாமல் நீண்ட தொலைவு பின்னால் ஓடிவந்த பிறகு ஏற்றிச் சென்ற பேருந்தின் ஓட்டுநருக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பான விடியோ இணையத்தில் வெளியான நிலையில், அரசுப் பேருந்து ஓட்டுநர் முனிராஜை இடைநீக்கம் செய்து போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.