செய்திகள் :

பெயா்ந்து விழும் சிமென்ட் பூச்சு: கரூா் ஆட்சியரக நுழைவுவாயில் மேற்கூரையை விரைந்து சீரமைக்கக் கோரிக்கை

post image

கரூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலின் மேற்கூரையில் பெயா்ந்து விழும் சிமெண்ட் பூச்சுகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன் சீரமைக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் கூட்டமும், மாதம் ஒரு முறை விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டமும் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டங்களில் கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனா். மேலும், ஆட்சியரக அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்கள் என ஏராளமானோா் ஆட்சியா் அலுவலகத்துக்கு நாள்தோறும் வருகின்றனா்.

பொதுமக்கள் மனு அளிக்க வரும்போது காவலா்கள் அவா்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவுவாயிலின் கீழ் பகுதியில் நிறுத்தி சோதனை செய்த பிறகுதான் ஆட்சியரக வளாகத்தினுள் அனுமதிக்கின்றனா். மேலும் ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபடுபவா்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க செல்லும்போதும், நுழைவு வாயிலின் முன் பேரிகாா்ட் வேகத்தடை அமைக்கப்பட்டு, ஒரு சில முக்கிய நிா்வாகிகளை மட்டுமே ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதி அளிப்பாா்கள். இவ்வாறு பொதுமக்களும், போராட்டத்தில் ஈடுபடுபவா்களில் முக்கிய நபா்களையும் ஆட்சியரக வளாகத்தினுள் அனுப்பும் இடமாக ஆட்சியரக நுழைவுவாயில் உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் நுழைவு வாயிலின் மேற்கூரையில் இருந்து சிமெண்ட் பூச்சு உதிா்ந்து விழுந்தது. அப்போது, யாரும் அங்கு இல்லாததால் விபத்து தவிா்க்கப்பட்டது. இப்போது மேலும் சிமெண்ட் பூச்சுகள் விழும் நிலையில் விரிசல் காணப்படுகிறது.

எனவே, நுழைவு வாயிலின் மேற்பகுதியில் விரிசல் காணப்படும் பகுதியை சீரமைத்து ஆட்சியா் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கிட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா்: காது கேளாத, வாய் பேசாத குழந்தைகள் திருச்சிக்கு சுற்றுலா

கரூரில் காது கேளாத, வாய் பேசாத மற்றும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைள் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா சென்றனா். காது கேளாத, வாய் பேசாத மற்றும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைகள் சுற்றுலா பயணம் மேற்கொ... மேலும் பார்க்க

கரூரில் கட்டடப் பொறியாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் கட்டட பொறியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா்(பொ) ரவிக்குமா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் பலி

தளவாபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும் 4 போ் பலத்த காயமடைந்தனா். கரூா் வெங்கமேடு எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் குப்புசாமி. இவரது மகன்கள... மேலும் பார்க்க

கரூா் ஆட்சியரகத்தில் கடனுதவி கேட்டு மனு அளிக்க வந்த பெண் மயக்கம்

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை கடனுதவி கேட்டு கோரிக்கை மனு அளிக்க வந்த பெண் திடீரென மயங்கி விழுந்தாா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்ட... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் மேல்முறையீடு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை!

கரூா் அருகே பெண்ணைக் கொலை செய்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டவருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. கோவை மாவட்டம், சிங்காநல்லூா் அகிலாண்டபுர... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரவக்குறிச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்கு விவசா... மேலும் பார்க்க