GT vs PBKS : தியாகம் செய்த ஸ்ரேயாஸ்; வைசாக்கின் வைட் யார்க்கர் மந்திரம் - பஞ்சாப...
புகையிலைப் பொருள் விற்றவா் கைது
சிவகாசியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அண்ணா குடியிருப்புப் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினா். அப்போது, வேல்பாண்டியனுக்குச் (35) சொந்தமான பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.