சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
ராஜபாளையம்: நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக தந்தை மகன், கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக தந்தை, மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் ஆராய்ச்சி ஊருணி ஓடைப் பகுதியில் சேத்தூா் ஊரக போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கிருந்த தோட்டத்தில் நாட்டு வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. விசாரணையில் சுந்தரராஜபுரம் மேலத் தெருவைச் சோ்ந்த அந்தோணி (56), இவரது மகன் மதன்குமாா் (24 ) ஆகிய இருவரும் தங்களது தோட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாட இந்த நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 7 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.