ராஜபாளையம் நகராட்சியில் வரும் 28-ஆம் தேதிக்குள் வரிகளைச் செலுத்த உத்தரவு
ராஜபாளையம் நகராட்சியில் நிலுவையில் உள்ள வரிகளை வரும் 28-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ராஜபாளையம் நகராட்சி ஆணையா் நாகராஜன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா் வரி, புதை சாக்கடை கட்டணம், குத்தகை இனங்களை வரும் 28-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
இவற்றைக் கட்டத் தவறினால் உரிமையாளா்களின் பெயா், வரிவிதிப்பு எண், விலாசம், நிலுவைத் தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடத்தில் விளம்பரப் பலகையில் வைக்கப்படும். மேலும், நிலுவைத் தொகையை வசூல் செய்ய சட்டப்பூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.