ஆணவத்தில் பேசிய பிரேசில் வீரருக்கு தன்னடகத்துடன் பாடம் கற்பித்த ஆர்ஜென்டீனா!
ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கியவா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரத்தில் 1,400 கிலோ ரேசன் அரிசி மூட்டைகளைப் பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் காந்தி நகரில் ஒரு கட்டடத்தில் போலீஸாா் சோதனையிட்டனா்.

அங்கு 35 மூடைகளில் இருந்த 1,400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மேலும், ரேஷன் அரிசி மூட்டைகளைப் பதுக்கியதாக தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சோ்ந்த சுடலைமணியை (37) போலீஸாா் கைது செய்தனா்.