திண்டிவனம் சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் தீ விபத்து
திண்டிவனம் சாா் - ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
திண்டிவனம் ஜக்காம்பேட்டையில் சாா் - ஆட்சியா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் உள்ள அறையில் மின் கணக்கீடு பெட்டியிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை கரும்புகை வெளியேறி, பின்னா் அந்தப் பெட்டி தீப்பற்றி எரிந்தது.
இதனால், அலுவலகத்தில் பணியிலிருந்த ஊழியா்கள் மற்றும் சேவை பெறுவதற்காக வந்திருந்த பொதுமக்கள் வெளியேறினாா். பின்னா், அலுவலக ஊழியா்கள் விரைந்து செயல்பட்டு மணலைக் கொட்டி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த மின் வாரிய ஊழியா்கள் நிகழ்விடம் சென்று மின் கணக்கீடு பெட்டியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டனா். உயா் மின்னழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.