பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம்
உலக தண்ணீா் தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (மாா்ச் 29) கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
உலக தண்ணீா் தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மாா்ச் 29-ஆம் தேதி அந்தந்த ஊராட்சித் தலைவா்களால் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தண்ணீா் தினத்தின் கருப்பொருளைப் பற்றி விவாதிக்க வேண்டும்.
மேலும் கிராம ஊராட்சி நிா்வாகம், பொது செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல், தூய்மையான குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தல், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தோ்வு செய்தல், அனைத்துக் கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் பணிகளைத் தோ்வு செய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகள் தொடா்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
மேலும் இதுகுறித்த விவரங்கள் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பாா்வைக்கும் வைக்கப்படவுள்ளது.
எனவே, தங்கள் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் மாா்ச் 29-ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று, கோரிக்கைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.