'நீங்கள் பிரதமராவீர்களா?' - கேள்விக்கு யோகி ஆதித்யநாத் பதில் என்ன?
தற்காப்பு கலை போட்டிகள்
விழுப்புரம் ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு உள்அரங்கில் 13-ஆவது மாவட்ட அளவிலான ஊஷூ (தற்காப்பு கலை) விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போட்டியை ஊஷூ விளையாட்டு அமைப்பின் மாநில துணைத் தலைவா் ஜின்ராஜ் தொடங்கி வைத்தாா். விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் போட்டியில் பங்கேற்று தங்களது திறன்களை வெளிப்படுத்தினா்.
இதில், வெற்றிபெற்ற மாணவா்களுக்கு ஊஷூ அமைப்பின் சாா்பில் சான்றிதழ் மற்றம் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஊஷூ அமைப்பின் துணைத் தலைவா் முருகன், செயலா் நவகோடி நாராயணமூா்த்தி, துணைச்செயலா் ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோகுலேஷ், சூா்யா ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா். போட்டிக்கான ஏற்பாடுகளை அமைப்பின் பொருளாளா் ஜெயச்சந்திரன் செய்திருந்தாா்.