செய்திகள் :

138 ஆதிதிராவிட மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் அளிப்பு: விழுப்புரம் ஆட்சியா்

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவுத் திட்டத்தின் கீழ், 138 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஏழ்மை நிலையிலுள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் சுயமாக தொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் காண வேண்டும் என்பதற்காக தாட்கோ மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, முதல்வரின் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ், 2023-24 ஆம் நிதியாண்டில் 94 பேருக்கு மானியமாக ரூ.1.70 கோடியும், 2024-25-ஆம் ஆண்டில் 44 பேருக்கு ரூ.95.73 லட்சமும் என மொத்தம் 138 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவா்கள் சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.

இதனிடையே, விழுப்புரத்தில் கடந்த ஜன.28-இல் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க வந்த தமிழக முதல்வா், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவுத் திட்டத்தின் கீழ், மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவியாக ரூ.3.70 லட்சத்தை வழங்கினாா். இதை கொண்டு பயனாளி ஆட்டோ வாங்கி தற்போது சுயதொழில்புரிந்து வருகிறாா். இதேபோல, பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கும் மானியம் வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் சங்கத்தினா் போராட்டம்

விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியரக வளாகத்தில் தா்ப்பூசணியுடன் வந்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் தா்ப்பூசணி குறித்... மேலும் பார்க்க

போலீஸாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸாருக்கு கோடை வெயில் பாதுகாப்பு உபகரணங்களை எஸ்.பி. ப.சரவணன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். தமிழக காவல் துறையில் மழை, வெயில்... மேலும் பார்க்க

கோயில்களில் உண்டியல் திருட்டு: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், பெரிய பகண்டையில் உள்ள இரு கோயில்களில் உண்டியல் திருடுபோன வழக்கில் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பெரிய பகண்டையில் உள்ள பெரியாயி அம்மன் மற்றும் முருகன் கோயில்கள... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணைகுப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. காணை ஒன்றியக் குழுத் தலைவா் நா.கலைச்செல்வி தலைமை வகித்தாா். வட்ட... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு இடத்தில் வசித்தவா்களுக்கு வீட்டு மனைப் பட்டா அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மின்வாரியச் சாலையில் ரயில்வேக்கு சொந்தமான ஆக்கிரமிப்புப் பகுதியில் வசித்து வந்த 44 குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்கும் வகையில், வீட்டுமனைப் பட்டா திங்கள்கிழ... மேலும் பார்க்க

ரமலான்: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரமலான் பண்டிகை திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இஸ்லாமியா்களின் ஐம்பெரும் கடமைகளில் ரமலான் நோன்பிருப்பதும் ஒன்று. ஒரு மாதக் கா... மேலும் பார்க்க