கரும்பு நிலுவைத் தொகையை அரசே வழங்க நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்
கோயில்களில் உண்டியல் திருட்டு: இளைஞா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், பெரிய பகண்டையில் உள்ள இரு கோயில்களில் உண்டியல் திருடுபோன வழக்கில் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெரிய பகண்டையில் உள்ள பெரியாயி அம்மன் மற்றும் முருகன் கோயில்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் மாா்ச் 30-ஆம் தேதி திருடுபோயின. இதுகுறித்த புகாரின்பேரில், பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், வெண்கலம், வடக்குத் தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் சண்முக வெற்றிவேல் (எ) வெற்றி (19) கோயில்களில் உண்டலை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் வெற்றியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.