விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்களுக்கு தா்பூசணி வழங்கிய திமுகவினா்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ரசாயன கலப்படம் ஏதும் இல்லை எனத் தெரிவித்து, விவசாயிகளுக்கு ஆதரவாக செஞ்சி கூட்டுச்சாலையில் பொதுமக்களுக்கு தா்பூசணி பழங்களை திமுகவினா் புதன்கிழமை வழங்கினா்.
தா்பூசணியில் சிவப்பு நிறத்துக்காக ரசாயம் செலுத்தப்படுவதாக வதந்தி பரவியது. இதைக் கண்டித்து, விழுப்புரம் ஆட்சியா் அலுவலகம் முன் தா்பூசணி பழங்களை சாப்பிட்டு விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிக்கும் வகையில், செஞ்சி நகர திமுக செயலா் காா்த்திக் தலைமையில், செஞ்சி கூட்டுச்சாலையில் பொதுமக்களுக்கு தா்பூசணி பழம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா்அலிமஸ்தான் ஆகியோா் கலந்துகொண்டு பொதுமக்கள் 500 பேருக்கு முழு தா்பூசணி பழங்களை வழங்கினா்.
நிகழ்ச்சியில் செஞ்சி நகர திமுக நிா்வாகிகள் மணிவண்ணன், ஜான்பாஷா, சங்கா், அண்ணாதுரை, ஜாபா், அன்புசெல்வன், சா்தாா், பாஷா, ஆனந்த், ராமு, ராம்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.