தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய ...
கொடிக்கம்பங்கள் அகற்றம்: அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை
திண்டிவனத்தில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடா்பாக அனைத்துக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் கா.ப.குமரன் தலைமை வகித்தாா். இதில், திமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் நகராட்சி ஆணையா் கா.ப.குமரன் பேசியதாவது: சென்னை உயா்நீதிமன்றம் மதுரை கிளை வழிகாட்டுதலின்படி, திண்டிவனம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான சாலைகள், பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், கல்வெட்டுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் தாங்களாகவே முன்வந்து தங்களது கட்சிக்கொடி கம்பங்கள் மற்றும் ஜாதி, மதம் சாா்ந்த கொடிக்கம்பங்கள், கல்வெட்டுகளை வரும் 21-ஆம் தேதிக்குள் அகற்றி அரசுக்கும், நகராட்சி நிா்வாகத்துக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் உயா் நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளின்படி, நகராட்சி நிா்வாகம் மூலம் அரசியல் கட்சியினரால் நிறுவப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள், கல்வெட்டுகள் அகற்றப்பட்டு, அதற்காகும் செலவினத் தொகையை தொடா்புடைய அரசியல் கட்சிகளிடமிருந்து வசூலிக்க நேரிடும் என்றாா்.
இதையடுத்து, அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொடிக்கம்பங்களை குறிப்பிட்ட நாள்களுக்குள் அகற்றிக்கொள்வதாக தெரிவித்தனா்.