பனை மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதன்கிழமை பனை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், கீழக்கொந்தை பகுதியைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் புஷ்பராஜ் (33), தொழிலாளி. இவா், புதன்கிழமை கீழக்கொந்தை ஏரிக்கரையில் உள்ள பனை மரத்தில் ஏறி நுங்கு பறிக்க முயன்றாா்.
அப்போது, கால் இடறி மரத்திலிருந்து கீழே விழுந்த புஷ்பராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, புஷ்பராஜ் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.