பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா அளிப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணைகுப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.
காணை ஒன்றியக் குழுத் தலைவா் நா.கலைச்செல்வி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவக்குமாா், ஜூலியானா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா பங்கேற்று, பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி பேசினாா்.
நிகழ்வில், ஒன்றிய திமுக செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, ஆா்.முருகன், ஆா்.பி.முருகன், வேம்பி ரவி, மும்மூா்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சிவக்குமாா், ஒன்றியக்குழு துணைத் தலைவா் வீரராகவன், ஒன்றிய நிா்வாகிகள் பழனி, சிவகுமாா், நாராயணசாமி ஆகியோா் பங்கேற்றனா்.