டிரம்ப்புக்கு சீனா பதிலடி: அமெரிக்க பொருள்கள் மீது 34% கூடுதல் வரி
Val Kilmer: உடல்நலக் குறைவால் காலமான பேட்மேன் நடிகர்; இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்
பேட்மேன் திரைப்பட நடிகர் வால் கில்மர் புற்றுநோய் பாதிப்பால் இன்று (ஏப்ரல் 2 ) உயிரிழந்திருக்கிறார். அவருக்கு வயது 65. 1984 ஆம் ஆண்டு வெளியான ‘Top Secret’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வால் கில்மர். ‘Top Gun’, ‘The Doors’, ‘Batman Forever’ போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென்ற ஒரு முத்திரையைப் பதித்திருந்தார்.

80-க்கும் மேற்பட்ட படங்களிள் நடித்துள்ள கில்மர், ‘Val’என்ற அவரது ஆவணப் படத்திலும் நடித்திருக்கிறார். நடிகை ஜோன் வேலியைத் திருமணம்செய்து விவாகரத்து செய்த கில்மருக்கு மெர்ஸிடிஸ், ஜாக் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஹாலிவுட் உலகில் கொடிகட்டிப் பறந்த கில்மர் சில வருடங்களாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்திருக்கிறார். அவரின் மறைவிற்குப் பலரும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...