வடிவேலுவின் கேங்கர்ஸ் டிரைலர்: யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்!
Shigeki Awai: புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குநர் - அனிமேட்டர் ஷிகேகி அவாய் காலமானார்
புகழ்பெற்ற ஜப்பானிய அனிமேட்டர் மற்றும் இயக்குநர் ஷிகெகி அவாய் தனது 71 வயதில் மரணமடைந்துள்ளார். ஷிகெனோரி அவாய் என்றும் அழைக்கப்படும் இவர், 1980 முதல் அனிமேஷன் துறையில் குறிப்பிடத்தக்க நபராக பணியாற்றுகிறார், பல உலகப் புகழ்பெற்ற அனிமேக்களுக்கு பின்னால் இவர் இருந்துள்ளார்.
ஒன் பீஸ், நருட்டோ ஷிப்புடன், புரூட்டோ: நெக்ஸ்ட் ஜெனரேஷன் போன்ற ஹிட் அனிமேக்களில் அனிமேட்டராக பணியாற்றியுள்ளார். இயக்குநராக ஒன் பஞ்ச் மேன், பேபிளேடு, ஃபுட் வார், டீக்கியோ அண்டர்கிரௌண்ட் ஆகிய அனிமேக்களை இயக்கியுள்ளார்.
Shigeki Awai, a veteran key animator and episode director since the 1980s, has sadly passed away at the age of 71.
— Anime News Centre (@animenewscentre) March 19, 2025
Over the course of his illustrious career, he directed an estimated 200+ episodes and contributed key animation to around 400–500 episodes. pic.twitter.com/xvV48fNbAa
அட்டாக் ஆன் டைட்டன், மை ஹீரோ அக்காடாமியா ஆகிய அனிமேக்களில் சில எபிசோடுகளில் அனிமேட்டராக பணியாற்றியுள்ளார், பிளாக் க்ளோவர், ஜோஜோ'ஸ் அட்வென்சர்ஸ் ஆகிய அனிமேக்களில் சில எபிசோடுகளை இயக்கியுள்ளார்.
அவாயின் மரணத்துக்கு அனிமே துறையில் பணியாற்றும் முக்கிய கலைஞர்களான ஹிடேகி மாட்சுவோகா மற்றும் சுடோமு ஓனோ உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
போகேமான் (POKÉMON) திரைப்படங்களில் அனிமேட்டரான ஹிடேகி மாட்சுவோகா, "எக்ஸ் தளத்தில் அவாய் ஷிகேகியின் மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஸ்டூடியோ கெலாபில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அவாயை சந்தித்தேன். அப்போது நாங்கள் இருவரும் முக்கிய அனிமேட்டர்களாக இருந்தோம். நாங்கள் இருவருமே கியூஷுவைச் சேர்ந்தவர்கள், இணைந்து பணியாற்றினோம்.

ஒரே புராஜக்ட்களில் பணியாற்றினோம். இருவரும் புதிது என்பதால் தினசரி நடவடிக்கைகள் குறித்து நிறைய பேசிக்கொண்டோம். 5,6 ஆண்டுகள் கழித்து நாங்கள் ஒன்றாக டோக்கியோ கிட்ஸ் அனிமேவில் பணியாற்றினோம். அவாய் காதாப்பாத்திர வடிவமைப்பாளராகவும் அனிமேஷன் இயக்குநராகவும் இருந்த அபாஷிரி இக்காவில் நான் பணியாற்றினேன், நான் அனிமேஷன் இயக்குநராக இருந்த ஒய்.எஸ்ஸில் அவாய் அனிமேட்டராக பணியாற்றினார். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் எங்கள் அனிமேஷன் டெஸ்கில் எதிரெதிராக அமர்ந்து பணியாற்றினோம்" என தனது அனுபவத்தையும் இரங்கலையும் பகிர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டுவரை தனது 70 வயதிலும் தி மிஸ்ஃபிட் ஆஃப் டீமோன் கிங் அகாடமி சீசன் 2, உசுமாகி மற்றும் டெர்மினேட்டர் ஜீரோ ஆகிய Anime -களில் சில எபிசோடுகளில் அனிமேட்டராகவும், இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks