பொதுப் பணித் துறை பணிநீக்க ஊழியா் சங்கத்தினா் போராட்டம்
புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப் பணித் துறை பணி நீக்க ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
புதுச்சேரியில் பொதுப் பணித் துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், அவா்கள் செவ்வாய்க்கிழமை காலை காமராஜா் சாலை பெரியாா் சிலை அருகிலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு சட்டப்பேரவை நோக்கி முற்றுகைப் போராட்டத்துக்கு வந்தனா்.
அவா்களை நேரு வீதி சந்திப்பில் காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். அப்போது சிலா் தாங்கள் கொண்டு வந்த நோட்டீஸை கிழித்து தீயிட்டனா். அதைத் தடுக்க முயன்ற போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின் போலீஸாா் தீயை அணைத்தனா். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு பின்னா் கலைந்து சென்றனா்.