RR vs KKR: `அது அவ்ளோதான் முடிஞ்சு' தடுமாறிய ராஜஸ்தான்; அலட்டாமல் ஆட்டத்தை முடி...
புத்தக வடிவில் புதிய குடும்ப அட்டை: அமைச்சா் என்.திருமுருகன்
புதுவை மாநிலத்தில் தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக புத்தக வடிவில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.திருமுருகன் தெரிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள், கலை, பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அவா் பதிலளித்து பேசியது: சிவப்பு நிற அட்டை வழங்குவதில் தற்காலத்துக்கு ஏற்ப விதிமுறைகள் திருத்தப்படும். குடும்ப அட்டை தவிா்த்து உணவு பங்கீட்டு அட்டைகள் அனைத்தும் பொது சேவை மையம் மூலம் வழங்கப்படும். தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாகப் புதிய அட்டைகள் புத்தக வடிவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுவையில் அனைத்து நூலகங்களும் எண்ம மயமாக்க (டிஜிட்டல்) நடவடிக்கை எடுக்கப்படும். கலைமாமணி, தமிழ்மாமணி விருதாளா்களுக்கு விருதுத் தொகை உயா்த்தி வழங்க பரிசீலிக்கப்படும். காரைக்கால் பழைய நீதிமன்ற வளாகத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். நூலகத் தகவல் உதவியாளா் பதவிகள் நிரப்ப கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. காமராஜா், பிரதமா் வீடு கட்டும் திட்டம் மத்திய, மாநில அரசுகள் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் என்றாா்.