மியான்மா் நிலநடுக்கம்: 1,600-ஐ கடந்த பலி! ராணுவ தலைவருடன் பிரதமா் மோடி பேச்சு!
டி காக் அதிரடி ஆட்டம்: கொல்கத்தாவுக்கு முதல் வெற்றி
ராஜஸ்தான் அணியை கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல்-இன் 6ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் கொல்கத்தா அணி மோதியது. இதில் கேகேஆர் அணியின் கேப்டன் ரஹானே டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 151/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 33 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் 29, சஞ்சு சாம்சன் 25 ரன்கள் எடுத்தார்கள். 5 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள். கடைசியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் அதிரடியாக விளையாடி 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார்.
கேகேஆர் அணியில் வருண் சக்கரவர்த்தி, மொயின் அலி, ஹர்சித் ராணா, வைபவ் அரோரா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். ஸ்பென்சார் ஜான்சன் 1 விக்கெட் எடுத்து 42 ரன்களை கொடுத்திருந்தார். 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த கொல்கத்தா அணி 17.3 ஓவர்களில் 153 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரரான குவின்டான் டி காக் 61 பந்துகளில் 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 97 ரன்கள் எடுத்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார். ரகுவன்ஷியும் 22 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.